Thursday, 31 October 2013

ஆரம்பம்... முதல் காட்சி ..!

அஜீத்தின் தீபாவளி ஸ்பெஷலான ஆரம்பம் படத்தின் முதல் காட்சி சற்று 

நேரத்துக்கு முன் முடிந்தது !

படத்தின் முதல் பாதி செம ஜாலியாக உள்ளது !. 

இரண்டாம் பாதி மட்டும் இன்னும் நன்றாக வந்திருக்கலாம் .!!


        இடம்பெற்றுள்ள ப்ளாஷ்பேக்குகள் மொக்கையாக உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிய மொக்கையல்ல என திருப்திப்பட்டுக் கொள்ளலாம் !




Wednesday, 30 October 2013

கட்டாயமாக செய்யக்கூடாதவை..!

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை:

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால்,அது சாதாரண நேரங்களில் சிகரெட்  பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.
2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால்,எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ          அவ்வளவு பெரிய தீமையாகும்.
3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது.காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு ப்புசத்திற்கு ஆளாக்கும்நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம்சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில்    உள்ளபுரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக்கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம்  உண்டு.

5. சாப்பிட்டபிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில்
அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக்கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ளிக்கும்போது  உடல்மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.வயிற்றுக்குச் செரிமானத்திற்குச்  செல்ல வேண்டிய ரத்தஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான  உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச்செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர்விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு.சர்க்கரை நோய்(டயாபடிக்)உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க
அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்லகேட்டிருப்பீர்கள்.சாப்பிட்ட பின் நடந்தால் செரிமானஉறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து,உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்தஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும்.எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால்அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர்உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது.உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச்செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூடநம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.



Monday, 28 October 2013

ஒரு சமுகத்தை முன்னேற்ற முதலில் கல்வியை கொடு ! !



 முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி..!!! 

 தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்கி (வயது 18) என்ற நரிக்குறவர் இன மாணவி தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக பிளஸ்-2 வகுப்பில் தேர்சசி பெற்று பட்டப்படிப்பை எட்டிப் பிடித்துள்ளார்...!!! 

ஷேர் பண்ணுங்க நண்பர்களே... பலரையும் சென்றடையட்டும்....!!!!

ஒரு சமுகத்தை ஒடுக்க வேண்டும் எனில் ,அவர்களுக்கு கல்வியை மறு !

ஒரு சமுகத்தை  முன்னேற்ற முதலில் கல்வியை கொடு ! !

Thursday, 24 October 2013

84 நோபல் பரிசுகள்.....!



84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா? 

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? 

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

1.கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் 

2.கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான் உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

3. உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான் 

4.கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் .. 


 உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர் 

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு 

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை........

இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று 

அந்த நாடு தான் இஸ்ரேல்

நல்ல மனசுகாரன் ..விஜய் சேதுபதி !



விஜய் சேதுபதி – அவர் வீட்டுக்கு படையெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர் 

சொல்வது 2017 வரைக்கும் கால்ஷீட் இல்லை என்பது. அதோடு நிற்காமல் 

அவர் அடுத்து சொல்லும் விஷயம் “திடீர்னு படங்கள் ஹிட் ஆனதும் என்னை 

தேடி வர்றீங்க. என்னை மாதிரியே நிறைய பேரு இதே கோடம்பாக்கத்தில் 

சுத்துறாங்க. அவங்களில் யார் உங்க கதைக்கு பொருத்தமா இருப்பாங்கன்னு 

கண்டு பிடிங்க. அவங்களுக்கும் வாழ்வு கொடுத்த மாதிரி இருக்கும். 

இல்லேன்னா சொல்லுங்க, நானே அப்படிப்பட்ட நண்பர்களை சொல்றேன் 

என்கிறாராம். ”பக்கத்து பிளேட்ல பல்லி விழுந்தா நமக்கென்ன, சொந்த 

பிளேட்ல சோறு விழுந்தா போதும்னு நினைக்கிற உலகத்துல இப்படி 

இருக்கிறவரை பாராட்டத் தான் வேண்டும் ...!

Wednesday, 23 October 2013

ஆண்களுக்கு 10 நிமிடத்திலேயே டயர்டாய்டும்.. அது என்ன?


ராம்ஜி - ஆண்களும் பெண்களும் இணைந்து செய்யும் வேலை அது. ஆனால், ஆண்களுக்கு பத்து நிமிடத்திலேயே சோர்வாகிப் போய் விடும். ஆனால் பெண்களுக்கு டைம் ஆக ஆகத்தான் உற்சாகம் கூடும்.. அது என்ன....?


 ராகவி - சீ .. போ.. இது கூடவா தெரியாது....! ராம்ஜி- மண்டு, மண்டு.. அது ஷாப்பிங்.. தப்புத் தப்பாவே நினைக்காதே....!

Friday, 18 October 2013

ரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம் ! ஓர் அதிரடி ரிப்போர்ட்

இது விகடனில் வந்த ஒரு மிக நல்ல கட்டுரை.


நன்றி விகடன் மற்றும் கட்டுரை ஆசிரியர் சரவணன் அவர்களுக்கு.
மூலம்ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்


###

சமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுக்கவே வீடு மற்றும் மனைகளின் விலை சரியும் அபாயம் உருவாகியுள்ளது.  



அண்மையில் அசோசம் அமைப்பு நடத்திய சர்வேயில் 82 சதவிகிதம் இந்திய இளைஞர்கள் தங்களது  விருப்பமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டில் ஒன்றாக ரியல் எஸ்டேட்டை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மனையின் விலையைத் தனிநபர் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது உலகத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் புதிய முதலீட்டுக்கான வாய்ப்பு குறைந்து, விலை இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சிக்கு சொல்லப்படும் காரணங்கள் பல. அவற்றில் முக்கியமானவை இனி:
உச்சத்தில் பணவீக்கம்!
பணவீக்கம் உச்சத்தில் இருப்பதைக் காரணம் காட்டி ரிசர்வ் வங்கி, கடனுக்கான வட்டியைக் குறைக்காமல் வைத்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டியும் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 8.5 சதவிகிதத்தில் ஃப்ளோட்டிங் ரேட்டில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான வட்டி இப்போது 11-12% என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. இதனால் வீட்டுக் கடன் வாங்கிய பலரும் மாதத் தவணைக் கட்டுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பொருளாதார மந்தநிலையால் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை. அதேசமயம், சேமிப்பு அதிகமாக குறைந்துள்ளதும் வீட்டுக் கடன் வாங்கியவர்களைச் சற்று அதிகமாகவே பாதித்திருக்கிறது.
அரசு வழிகாட்டி மதிப்பு அதிர்ச்சி!
நாடு முழுக்க சந்தை மதிப்புக்கு இணையாக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. டெல்லி போன்ற மாநிலங்களில் பவர் ஆஃப் அட்டர்னி மூலமே சொத்து கைமாறியது, வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கியது எல்லாம் நிறுத்தப்பட்டு சொத்தை பதிவு செய்தால்தான் விற்க முடியும், வீட்டுக் கடன் வாங்க முடியும் என்கிற நிலை வந்து விட்டது. தமிழ்நாட்டிலும், பெரும்பாலான இடங்களில் சந்தை மதிப்புக்கு இணையாக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்ந்துவிட்டது. இதனால் பத்திரப்பதிவு செலவு கணிசமாக உயரவே, மக்களும் புதிதாக இடம் வாங்க யோசிக்கிறார்கள்.  
சிக்கலில் பொருளாதாரம்!
உலக அளவிலும் வளர்ந்து வரும் நாடுகளி லும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பும் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. தொழிற்துறையில் புதிய முதலீடுகள் குறைந்து வளர்ச்சி மந்தமாக இருப்பதால்  இது ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி இருக்கிறது.
எக்கச்சக்க விலை!
தனிநபர் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும்போது உலக அளவில் இந்திய ரியல் எஸ்டேட்தான் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. பல பகுதிகளில் மனை விலை பல நூறு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.  இந்த அளவு அதிக விலை தந்து மனையை வாங்கும் நிலையில் இப்போது பலரும் இல்லை.

வாங்கும் திறன் இல்லை!
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.20 கோடி பேர் புதிதாக வேலை தேடி வருகின்றனர். ஆனால், 45 லட்சம் பேருக்குதான் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரமுடிகிறது. இதனால் பலரும் புதிதாக மனை வாங்குகிற திறன் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் இனிவரும் காலத்தில் சொந்த வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ரியல் எஸ்டேட் முதலீடும் குறையும். இதனால் விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருநகரங்களில் வீடு அல்லது ஃப்ளாட் வாங்கவேண்டும் என்றால் இன்றைய நிலையில் சுமார் 60 - 75 லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்த அளவுக்கு அதிக வசதி உள்ளவர்கள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். அதனால் விற்பனையில் நிச்சயம் தொய்வு ஏற்படவே அதிக வாய்ப்பு என்கிறார்கள்.
தவிர, சொந்த வீடு வாங்கவேண்டும் எனில் இன்றைய நிலையில் சராசரியாக ஒருவரது இருபதாண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது. அந்த வகையில் வெகு சிலரால் மட்டுமே சொந்த வீடு வாங்க முடிகிறது.
குறைந்துபோன பிரைவேட் ஈக்விட்டி!
இந்திய ரியல் எஸ்டேட்டில் 2005 - 2012 ஆண்டுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்தன. 20 பில்லியன் டாலர் இத்துறையில் அயல்நாடுகளிலிருந்து முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீடுகள் அதிகமாக மனைகள் வாங்க உபயோகப் படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் வீடுகளை இன்னும் கட்டவே  ஆரம்பிக்கவில்லை. பிரைவேட் ஈக்விட்டி  முதலீடு என்பது 7 முதல் 8 வருடங்களுக்கு என்பதால் தற்போது அவை முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் காலம் வந்துவிட்டது. இந்த நிறுவனங்கள் சராசரியாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 45-ஆக இருக்கும்போது முதலீடு செய்திருக்கின்றன. இப்போது சுமார் 60 ரூபாய் என்கிற அளவில் இழப்பு என்பது 30 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, இந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பணத்தைத் திருப்பித் தரும்போது வட்டி இழப்பு ஒரு பக்கம் என்றால், இந்த ரூபாய் மதிப்பு மாற்றம் மூலமான இழப்பு இன்னொரு பக்கம். இதனால் வீடுகள் விற்காத நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வீட்டின் விலையைக் கணிசமாக குறைக்கும் நிலைக்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த 12-18 மாத காலத்தில் விலை இன்னும் குறையக்கூடும் என்கிறார்கள்.  
விரைவில் தேர்தல்!
அடுத்த 10 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தல்கள் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதற்காக சுமார் 1,500 கோடி டாலர் (சுமார் 90,000 கோடி ரூபாய்) செலவிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தத் தொகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ரியல் எஸ்டேட் முதலீட்டிலிருந்துதான் வரவேண்டி இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அந்த வகையில் டிமாண்ட் குறைவாக இருக்கும்போது ரியல் எஸ்டேட் சொத்துகளை விலை குறைத்துதான் விற்கவேண்டி வரும் என்று சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்.    
நெருக்கும் வங்கிக் கடன்!
ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைப் பல்வேறு வங்கிகளும் புராஜெக்ட் லோன் என்கிற பெயரில் வழங்கி உள்ளன. வீடுகள் விற்காத நிலையில் அல்லது விலை குறைத்து விற்கும்போது வங்கிக் கடன் திரும்ப வருவதில் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே இதுபோன்ற சிக்கலில் சில முன்னணி புரமோட்டர்கள் சிக்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு வங்கிகளும் கடனைத் திரும்பத் தரும்படி நெருக்க, இதனாலும் இடங்களின் விலை குறையும் வாய்ப்புண்டு.
பயனில்லாத வாடகை வருமானம்!
இந்தியாவில் வீட்டு வாடகை மீதான வருமானம், சொத்து விலையுடன் ஒப்பிடும் போது வெறும் 2.5 சதவிகிதமாகவே உள்ளது. 10 சதவிகித வட்டியில் வீட்டுக் கடன் வாங்கி, அதன்மூலம் வாங்கப்படும் வீட்டின் மூலம் வெறும் 2.5 சதவிகித வருமானம் கிடைத்தால் என்ன செய்வது? என பலரும் யோசிக்க ஆரம்பித்திருப்பதாலும், புதிதாக வீடு வாங்கும் முடிவைத் தள்ளிவைத்திருக்கின்றனர்.
அச்சுறுத்தும் குமிழ்!
ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில் பப்பிள் (Bubble) என்பது எதிர்காலத்தில் அதிகமாக விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பில் இப்போதே விலை அதிகரித்து காணப்படுவதாகும். இந்த நிலைதான் தற்போது இந்திய ரியல் எஸ்டேட்டில் உருவாகி இருப்பதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். அந்தவகையில், ரியல் எஸ்டேட்டில் வரும் 12-18 மாதங்களில் விலை வீழ்ச்சி 30-40 சதவிகிதம் வரை இருக்கக்கூடும் என்பது அவர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்த நிலை நான்கைந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
வழக்கில் முடியும் முதலீடு!
புதிதாக ரியல் எஸ்டேட் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்கள் அறிவிக்கும்போது, அறிமுக சலுகை தருவார்கள். அதில் குறுகிய கால முதலீட்டாளர்கள் முன்பணம் சில லட்சம் ரூபாயைத் தந்து முடக்கி வைப்பார்கள்.
6 முதல் 8 மாதங்களில் விலை ஏறும்போது வேறு ஒருவருக்கு அந்த ஃப்ளாட்டை கைமாற்றிவிட்டு சுமார் 20 சதவிகித லாபம் பார்ப்பார்கள். இப்போது நிலைமை சரியில்லை என்பதால் இதுபோன்ற குறுகிய கால முதலீட்டாளர்களின் நிலைமை தர்மசங்கடமாக உள்ளது. இவர்கள் பில்டர்களிடம் பணத்தைப் புரட்ட இன்னும் சில காலம் கொடுங்கள் எனக் கேட்டு வருவதாகத் தகவல். சில வழக்குகள் நீதிமன்றம் வரைக்கும்கூட சென்றிருக்கிறது.    
ஆர்.பி.ஐ.-ன் அதிரடி!
சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகட்டி முடிக்கும் வரை உள்ள இ.எம்.ஐ. தொகையைத் தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி வீடுகளை விற்று வருகின்றன. வங்கிகள் வீட்டுக் கடன் தரும்போது, ரியல் எஸ்டேட் நிறுவனம் வங்கிகளிடமிருந்து முழுக் கடனையும் பெற்றுக்கொண்டு இதுபோல் சலுகைகளை அளிக்கின்றன. இதுபோல முழுத் தொகையையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு மொத்தமாக தரக்கூடாது என ஆர்.பி.ஐ. அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, வீட்டை வாங்குபவர் சொத்து மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கையிலிருந்துதான் போட வேண்டும். மீதி 80 சதவிகித தொகையை வங்கிக் கடனாக அளிக்கும். இந்த 80 சதவிகித தொகையை மொத்தமாகத் தராமல் கட்டுமான நிலைக்கு ஏற்ப வங்கிகள் வழங்க வேண்டும் என ஆர்.பி.ஐ. கூறியுள்ளது. இதன்மூலம் வீடு வாங்குபவர்களுக்கு கணிசமாக வட்டி மிச்சமாகும். கடன் தரும் வங்கிகளும் சிக்கலில் மாட்டிக்கொள்வது குறையும் என்பது ஆர்.பி.ஐ-ன் எண்ணம்.
விற்காமல் கிடக்கும் வீடுகள்!
நாடு முழுக்க கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் முடங்கிக்கிடக்கின்றன. மும்பையில் கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்று விற்பதற்கு குறைந்தது 48 மாதங்கள் ஆகிறது. இது பெங்களூருவில் 25 மாதங்களாகவும், டெல்லியில் 23 மாதங்களாகவும், சென்னையில் இது 17 மாதங்களாகவும் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடு விற்க 15 மாதங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் சென்னை பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், கட்டிமுடிக்கப்பட்டு விற்காமல் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 45,000 ஆக இருக்கிறது என்கிறது ரியல் எஸ்டேட் அமைப்பான கிரடாய்.  கோவையில் 4,500 குடியிருப்பு கள் விற்கப்படாமல் இருப்பதாகவும் தெரிகிறது.
ரியல் எஸ்டேட் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் நெகடிட்டிவ்-ஆக இருப்பதால் கூடிய விரைவில் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சொத்து வாங்க நினைப்பவர்கள் சற்று நிதானமாக யோசித்து வாங்குவதே லாபகரமாக இருக்கும்

Wednesday, 16 October 2013

விடுமுறையில் விவசாயம் ..!

விடுமுறையில் விவசாயம் செய்யுங்கள் உடல் ஆரோக்கியம் அடையும்!

எதில் மாற்று கருத்து இருந்தாலும், உலகிற்கே உணவளிப்பது விவசாயம் மட்டுமே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது அப்படி மாற்றுக்கருத்து இல்லை என்று பகிரங்கமாக கூறிக்கொண்டு விவசாயத்தில் தற்போது கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், மென்பொருள் துறையினர், சமுக சேவகர்கள் என பல்வேறு தரப்பினர் வார இறுதியில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தி நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளது.

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வாழும் படித்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வர இறுதியில் விவசாயத்தில் ஈடுபடுகின்றார்கள் என்றும் இதில் மிகுந்த ஈடும்பாடு கொண்டவர்கள் முழுநேர விவசாயிகளாக உருவேடுகின்றனர் என்கிறது நாளிதழ் செய்திகள்.

இதேபோல் தொழில் துறையில் இருந்து தன் ஆர்வமிகுதியால் விவசாயத்தை முழுநேர தொழிலாக மாற்றிகொண்ட திரு. சதீஷ் அவர்கள் கூறுகையில் நான் ஆரம்ப காலத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் துறையில் பணியற்றிவரும்போது நிறைய சமுக பணிகளில் ஈடுபட்டுவந்தேன் அப்போதுதான் இயற்கை விவசாய முறையை பற்றி அறிந்தேன், எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயமே!.. சிறந்த சமுகபணி என்று உணர்தேன், இதனால் இன்று முழுவநேர விவசாயியாக மாறிவிட்டேன் என்கிறார். இதே போல் திரு.ராம், திரு.ஜகன் போன்றோர் முழுநேர விவசாயிகளாக மாறிவிட்டனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விவசாய ஆர்வளர் திரு.ராம் கூறுகையில் பெருநகரத்தில் வாழும் மக்கள் வாரவிடுமுறையில் நகரத்திற்கு அருகமையில் இருக்கும் விளைநிலங்களில் விவசாயிகளுடன் இணைந்து வேலைசெய்யலாம் இதனால் உடல் அதிக வியர்வை வெளியேற்றி அரோக்கியம் அடையச்செய்யும், ஒரு நாள் இயற்கை காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும், உலகிற்கே உணவளிக்கும் பணியை செய்த திருப்தி கிடைக்கும் கடவுளின் பிரதிநிதி விவசாயி என்ற பெருமையோடு அவர்கள் வாடிக்கையான தொழிலை செய்யலாம் என்கிறார்.
நன்றி :: இனையம்


Monday, 14 October 2013

ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், நகரத்தில் கிடைக்காது ...!

இந்த ஆனந்தம்,ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும்,  நகரத்தில் கிடைக்காது !




Thursday, 10 October 2013

சச்சின் டெண்டுல்கரை தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" தெரியுமா ?


எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்  " சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்".

சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?

சந்தீப் பூனேயில் உள்ள 'நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில்' பயிற்சி பெற்றார்.   அதன் பின்னர் பீஹார் ரெஜிமென்டில் பணியாற்றிய சந்தீப், இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பில் திறம்பட பணியாற்றினார்.  பின்னர். "நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸ்" எனப்படும் சிறப்பு பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடிந்தபின், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் சிறப்பு அதிரடி படையின் பல கடுமையான, துணிச்சலான, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.  கார்கில் போரிலும், பல மோதல்களில்,  தன்னை நாட்டுக்காக ஈடுபடுத்திக் கொண்ட பெருமையை உடையவர்  மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன்.

பம்பாய் தாஜ் ஓட்டலுக்கு, அழிவு நாடான பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள், அப்பாவி மக்களை பினைக் கைதிக‌ளாக வைத்துக் கொண்டு, தங்கள் வெறியாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அதிலிருந்து அந்த பினைக் கைதிகளையும், இந்த தேசத்தின் மானத்தையும் காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்டவர்கள், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் "சிறப்பு அதிரடை படையினர்.  அந்த சிறப்பு அதிரடிப் படையினர்,  மக்களை மீட்பதற்காகவும்,  தீவிரவாதிகளை அழிப்பதற்காகவும் "ஆப்பரேஷன் ப்ளாக் டோர்னேடோ" என்று அழைக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தை நடத்தினர்.  அந்த அதிரடைப் படைக்கு தலைமை தாங்கியவர்தான் 31 வயதே ஆன, சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்.

26, நவம்பர் 2008 நள்ளிரவில், தாஜ் மஹால் ஹோட்டலை தீவிரவாதிகள் ஊடுறுவி, பல அப்பாவி மக்களை கேடயமாக வைத்துக் கொண்டும் நாசச் செயல் புரிந்துக் கொண்டு இருக்கையில், ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப் வரவழைக்கப்பட்டது.
பயங்கரமான் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுக‌ளோடும்,  நவீன ரக துப்பாக்களோடும் கொலை வெறி தாண்டவம் புரிந்துக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள்.  மேஜர் சந்தீப்பும் அவரின் குழுவினரும் ஆறாவது மாடியை படிகட்டுகள் வழியாக நெருங்கிவிட்டிருந்த வேளையில்,  கீழே மூன்றாவது தளத்தில் தீவிரவாதிகள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. தீவிரவாதிகள் சில பெண்களை பினைக்கைதிகளாக ஒரு அறையில் உள் வைத்து உட்புறமாக பூட்டிக் கொண்டிருந்தனர்.   அதை அவர்கள் நெருங்கிய வேளையில், தீவிரவாதிகளின் திடீர் தொடர் துப்பாக்கி வெடியில் கமேண்டோ "சுனில் யாதவ்" காயமுற்றார்.  மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணன் தன் கூட்டத்தை பின் செல்லுமாறு பணித்து, தான் முன் சென்று தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டார்.  இப்படி அவர் செய்ததன் மூலமாக காலில் காயமுற்ற சுனில் யாதவை காப்பாற்றி மீட்க முடிந்தது.  அவரின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் மற்றொரு தளத்திற்கு தப்பித்து ஓடினர்.

தன்னந்தனியாக அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியவாறு சென்ற மேஜர் சந்தீப், பின் பக்கத்திலிருந்து வந்த தாக்குதலால், படுகாயமடைந்தார்.  அவரின் உயிர் பாரத‌ மண்ணுக்காக வீழ்ந்தது. அவரின் உடல் விதைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளில், பொறுக்கி எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது பத்து தீவிரவாதிகள்.  அவர்க‌ளில் நால்வர் தாஜ்  ஹோட்டலில் அழிக்கப்பட்டனர்.  300 மக்கள் மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்டவர்களில் பல வெளிநாட்டு தலைவர்களும் அடங்குவார்கள்.  

கடைசியாக மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் "நீங்கள் யாரும் வராதீர்கள், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன்" (Don’t come up, I will handle them) என்பதுதான். இந்த தாக்குதலில் அவரோடு கஜேந்திர சிங் என்ற மற்றொரு இந்திய வீரரும் உயிரை நாட்டுக்கு அர்பித்தார்.  

நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இளமையை, வாழ்வை, உயிரை அர்ப்பனித்த இத்தகைய மாவீரர்களை இந்திய குடிமகன்களாகிய நாம் எப்போதும் நெஞ்சில் நிறுத்த‌ வேண்டும்.  இவர்களின் தியாகத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நமக்காக, நம் பாதுகாப்புக்காக, எங்கோ எல்லையில் மடிகிறானே முகம் தெரியாத‌ ஒரு இராணுவ வீரன் அவனை என்று இந்த தேசம் உரிய முறையில் எண்ணிப் பார்க்கிறதோ, அன்று இந்த தேசம் உயரும்.  

ஜெய் ஹிந்த்.


எனக்கு பிடித்த நிஜ மனிதர் " சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்".

சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?

சந்தீப் பூனேயில் உள்ள 'நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில்' பயிற்சி பெற்றார். அதன் பின்னர் பீஹார் ரெஜிமென்டில் பணியாற்றிய சந்தீப், இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பில் திறம்பட பணியாற்றினார். பின்னர். "நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸ்" எனப்படும் சிறப்பு பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடிந்தபின், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் சிறப்பு அதிரடி படையின் பல கடுமையான, துணிச்சலான, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். கார்கில் போரிலும், பல மோதல்களில், தன்னை நாட்டுக்காக ஈடுபடுத்திக் கொண்ட பெருமையை உடையவர் மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன்.

பம்பாய் தாஜ் ஓட்டலுக்கு, அழிவு நாடான பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள், அப்பாவி மக்களை பினைக் கைதிக‌ளாக வைத்துக் கொண்டு, தங்கள் வெறியாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அதிலிருந்து அந்த பினைக் கைதிகளையும், இந்த தேசத்தின் மானத்தையும் காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்டவர்கள், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் "சிறப்பு அதிரடை படையினர். அந்த சிறப்பு அதிரடிப் படையினர், மக்களை மீட்பதற்காகவும், தீவிரவாதிகளை அழிப்பதற்காகவும் "ஆப்பரேஷன் ப்ளாக் டோர்னேடோ" என்று அழைக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தை நடத்தினர். அந்த அதிரடைப் படைக்கு தலைமை தாங்கியவர்தான் 31 வயதே ஆன, சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்.

26, நவம்பர் 2008 நள்ளிரவில், தாஜ் மஹால் ஹோட்டலை தீவிரவாதிகள் ஊடுறுவி, பல அப்பாவி மக்களை கேடயமாக வைத்துக் கொண்டும் நாசச் செயல் புரிந்துக் கொண்டு இருக்கையில், ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப் வரவழைக்கப்பட்டது.

பயங்கரமான் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுக‌ளோடும், நவீன ரக துப்பாக்களோடும் கொலை வெறி தாண்டவம் புரிந்துக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள். மேஜர் சந்தீப்பும் அவரின் குழுவினரும் ஆறாவது மாடியை படிகட்டுகள் வழியாக நெருங்கிவிட்டிருந்த வேளையில், கீழே மூன்றாவது தளத்தில் தீவிரவாதிகள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. தீவிரவாதிகள் சில பெண்களை பினைக்கைதிகளாக ஒரு அறையில் உள் வைத்து உட்புறமாக பூட்டிக் கொண்டிருந்தனர். அதை அவர்கள் நெருங்கிய வேளையில், தீவிரவாதிகளின் திடீர் தொடர் துப்பாக்கி வெடியில் கமேண்டோ "சுனில் யாதவ்" காயமுற்றார். மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணன் தன் கூட்டத்தை பின் செல்லுமாறு பணித்து, தான் முன் சென்று தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டார். இப்படி அவர் செய்ததன் மூலமாக காலில் காயமுற்ற சுனில் யாதவை காப்பாற்றி மீட்க முடிந்தது. அவரின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் மற்றொரு தளத்திற்கு தப்பித்து ஓடினர்.

தன்னந்தனியாக அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியவாறு சென்ற மேஜர் சந்தீப், பின் பக்கத்திலிருந்து வந்த தாக்குதலால், படுகாயமடைந்தார். அவரின் உயிர் பாரத‌ மண்ணுக்காக வீழ்ந்தது. அவரின் உடல் விதைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளில், பொறுக்கி எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது பத்து தீவிரவாதிகள். அவர்க‌ளில் நால்வர் தாஜ் ஹோட்டலில் அழிக்கப்பட்டனர். 300 மக்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பல வெளிநாட்டு தலைவர்களும் அடங்குவார்கள்.

கடைசியாக மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் "நீங்கள் யாரும் வராதீர்கள், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன்" (Don’t come up, I will handle them) என்பதுதான். இந்த தாக்குதலில் அவரோடு கஜேந்திர சிங் என்ற மற்றொரு இந்திய வீரரும் உயிரை நாட்டுக்கு அர்பித்தார்.

நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இளமையை, வாழ்வை, உயிரை அர்ப்பனித்த இத்தகைய மாவீரர்களை இந்திய குடிமகன்களாகிய நாம் எப்போதும் நெஞ்சில் நிறுத்த‌ வேண்டும். இவர்களின் தியாகத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்காக, நம் பாதுகாப்புக்காக, எங்கோ எல்லையில் மடிகிறானே முகம் தெரியாத‌ ஒரு இராணுவ வீரன் அவனை என்று இந்த தேசம் உரிய முறையில் எண்ணிப் பார்க்கிறதோ, அன்று இந்த தேசம் உயரும்.

ஜெய் ஹிந்த்.

நன்றி :: இனையம்