Saturday, 31 August 2013

எச்சரிக்கை..... எயிட்ஸ் .!


எச்சரிக்கை..!

பிறரும் அறிய இச்செய்தியினை ஷேர்
செய்யுங்கள்...!
10 வயது மாணவன் ஒருவன் 15
நாட்களுக்கு முன்னர் அவன்
பள்ளி அருகில் விற்கப்பட்ட
அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அ
அடுத்த நாளில்
இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம
போனது.
அவனது பெற்றோர்
அவனை மருத்துவமனைக்கு அழைத்து ச
பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த
பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்ச
இருப்பது இரத்தப் பரிசோதனையில்
தெரிய வந்தது.
அவர்கள் குடும்பத்தில் இருக்கும்
அனைவரையும் இரத்தப்
பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால்
யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த
மாணவினடம் என்றில்
இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்
டாக்டர்.
15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில்
விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த
நாளில்
இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த
மாணவன் டாக்டரிடம் சொன்னான்.
டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ
வியாபாரியை அழைத்து வரச்
சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கு
நறுக்கும் வியாபாரியின் கையில்
வெட்டு காயம் இருப்பதை டாக்டர்
பார்த்தார்.அவர் பழம் நறுக்கும்
போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல்
கலந்திருக்கிறது.
பழ வியாபரிக்கு இரத்தப்
பரிசோதனை செய்து பார்த்தார்
டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ
வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய
வந்தது.இத்தனை நாட்களாக பழ
வியாபாரி தனக்கு எயிட்ஸ்
இருப்பதே தெரியாது என்றார்.
இனி மேல் ரோடுகளில் விற்கப்படும்
பொருட்களை வாங்கி சாப்பிடும்
அனைவரும் கவணமாக இருங்கள்.இந்த
தகவலை அனைவருக்கும் தெரிய
படுத்துங்கள் நண் பர்களே...எச்சரிக்கை
எச்சரிக்கை..!

பிறரும் அறிய இச்செய்தியினை ஷேர்
செய்யுங்கள்...!
10 வயது மாணவன் ஒருவன் 15
நாட்களுக்கு முன்னர் அவன்
பள்ளி அருகில் விற்கப்பட்ட
அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.

அடுத்த நாளில்
இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம
போனது.

அவனது பெற்றோர்
அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .
பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த
பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைத்தனர் !!


 எயிட்ஸ் இருப்பதுஇரத்தப் பரிசோதனையில்
தெரிய வந்தது !
.
அவர்கள் குடும்பத்தில் இருக்கும்
அனைவரையும் இரத்தப்
பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால்
யாருக்கும் எயிட்ஸ் இல்லை.

பிறகு அந்த
மாணவினடம் என்றில்
இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்றார்
டாக்டர்.


15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில்
விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த
நாளில்இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த
மாணவன் டாக்டரிடம் சொன்னான்.


டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ
வியாபாரியை அழைத்து வரச்
சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கு
நறுக்கும் வியாபாரியின் கையில்
வெட்டு காயம் இருப்பதை டாக்டர்
பார்த்தார்.

அவர் பழம் நறுக்கும்
போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல்
கலந்திருக்கிறது.

பழ வியாபரிக்கு இரத்தப்
பரிசோதனை செய்து பார்த்தார்
டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ
வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய
வந்தது !.

இத்தனை நாட்களாக பழ
வியாபாரி தனக்கு எயிட்ஸ்
இருப்பதே தெரியாது என்றார்.


இனி மேல் ரோடுகளில் விற்கப்படும்
பொருட்களை வாங்கி சாப்பிடும்
அனைவரும் கவணமாக இருங்கள்.

இந்த தகவலை அனைவருக்கும் தெரிய
படுத்துங்கள் நண் பர்களே...எச்சரிக்கை!

Tuesday, 27 August 2013

ஆய கலைகள் 64 ...!




சிவ மேனகை ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . 

எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.


1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)

2. எழுத்தாற்றல் (லிகிதம்)

3. கணிதம்

4. மறைநூல் (வேதம்)

5. தொன்மம் (புராணம்)

6. இலக்கணம் (வியாகரணம்)

7. நயனூல் (நீதி சாத்திரம்)

8. கணியம் (சோதிட சாத்திரம்)

9. அறநூல் (தரும சாத்திரம்)

10. ஓகநூல் (யோக சாத்திரம்)

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)

16. மறவனப்பு (இதிகாசம்)

17. வனப்பு

18. அணிநூல் (அலங்காரம்)

19. மதுரமொழிவு (மதுரபாடணம்)

20. நாடகம்

21. நடம்

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)

23. யாழ் (வீணை)

24. குழல்

25. மதங்கம் (மிருதங்கம்)

26. தாளம்

27. விற்பயிற்சி (அத்திரவித்தை)

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)

30. யானையேற்றம் (கச பரீட்சை)

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)

35. மல்லம் (மல்ல யுத்தம்)

36. கவர்ச்சி (ஆகருடணம்)

37. ஓட்டுகை (உச்சாடணம்)

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)

39. காமநூல் (மதன சாத்திரம்)

40. மயக்குநூல் (மோகனம்)

41. வசியம் (வசீகரணம்)

42. இதளியம் (ரசவாதம்)

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)

47. கலுழம் (காருடம்)

48. இழப்பறிகை (நட்டம்)

49. மறைத்ததையறிதல் (முஷ்டி)

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)

51. வான்செலவு (ஆகாய கமனம்)

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)

54. மாயச்செய்கை (இந்திரசாலம்)

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

10- ரூபாய் அனுபவம்...!






ஒருவர் தனது அனுபவத்தை பகிரிந்து கொள்கிறார் !

நன்றி :: இணையம் 


ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌., பகிர வேண்டிய விசியம்  !


இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

Monday, 26 August 2013

இளமை ....இனிமை !




என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம்
என்னவெனில்,

 உஷ்ணம், காற்று, நீர் 

ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். 

இதனாலேயே நோய் தோன்றுகிறது. 

உஷ்ணத்தால்-  பித்த நோய்களும், 

காற்றினால்-  வாத நோய்களும், 

நீரால்  -கப நோய்களும் உண்டாகின்றன. 


நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் 

வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். 

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. 

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

 "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். 

 கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், 

காது கேளாமை, 

சுவையின்மை, 

பித்த நோய்கள், 

வாய்ப்புண்,

 நாக்குப்புண், 

மூக்குப்புண், 

தொண்டைப்புண், 

இரைப்பைப்புண், 

குடற்புண், 

 ஆசனப்புண், 

அக்கி, 

தேமல், 

படை, 

தோல் நோய்கள், 

உடல் உஷ்ணம், 

வெள்ளைப்படுதல், 

மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, 

பாத எரிச்சல், 

மூல எரிச்சல், 

உள்மூலம், 

சீழ்மூலம், 

 ரத்தமூலம், 

ரத்தபேதி, 

பௌத்திரக் கட்டி, 

சர்க்கரை நோய், 

இதய நோய், 

மூட்டு வலி, 

உடல் பலவீனம்,

 உடல் பருமன், 

ரத்தக் கோளாறுகள்,

ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் 

அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...


"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-


காலை வெறும் வயிற்றில் இஞ்சி- 

நண்பகலில் சுக்கு- 

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, 

கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். 


எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி 

இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க 

வேண்டிய பொக்கிஷமாகும்



Monday, 19 August 2013

ஆத்திசூடி ...!

பெருமை மிக்க நமது ஆத்திசூடியை உலகறியச் செய்வோம். அதிகமாகப் பகிருங்கள். மற்ற 
இனத்தவர்களிடமும் கொண்டு சேருங்கள்.


1. அறம் செய விரும்பு  / 1. Learn to love virtue
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeable s.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.


Aathichoodi ( Tamil Literature ) is a collection of single-line quotations written by Auvaiyar who lived in the 12th 
century and organized in alphabetical order. All Tamil people share this to the world.

கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்...!

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என 

கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்...



அஞ்சாதா சிங்கமென்றும்

அன்றெடுத்த தங்கமென்றும்

பிஞ்சான நெஞ்சினர் முன்

பேதையர்முன் ஏழையர் முன்

நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து

பஞ்சாங்கம் பார்த்திருக்கும்

பண்புடையான் கவிஞ‌னெனில் !

நானோ கவிஞ‌னில்லை !

என்பாட்டும் கவிதையல்ல‌. !!.....
 ...!!




பகுத்தறிவை ஊர்க்குரைத்து

பணத்தறிவை தனக்குவைத்து

தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்

சோடனைகள் செய்து வைத்து

நகத்து நுனி உண்மையின்றி

நாள்முழுதும் வேடமிட்டு

மடத்தில் உள்ள சாமிபோல்

மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா

மானிடத்து தலைவரென்று

பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

பேதையனே கவிஞ‌னெனில் !

நானோ கவிஞ‌னில்லை ...!!




Sunday, 11 August 2013

மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது !

50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !


ஆனால், ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் ! !


3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !


ஆனால், 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் ! !



வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !


ஆனால், முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !!



அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !



 ஆனால் ,காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !!




இதுதான் இன்றைய மனிதனின் நிலை.



மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!

Wednesday, 7 August 2013

22 - 26 வயது... ஆண்கள் !



    22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.



1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.



2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.



3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.



4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.


5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.


6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.


7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.


8) உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?


9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.


10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.


11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.


12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.


13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .


14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.


15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

..............................................................................................


..............................................................................................

உங்களுக்கு தோன்றுவதை நீங்கள் பின்னூட்டதில்  பகிரலாம் !


நன்றி :: இணையம்