Monday, 30 September 2013
Thursday, 26 September 2013
6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம்...!
சினிமா விகடன் 6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் :
அந்தச் சிறுவன், பெற்றோரைப் பரிதவிக்கவிட்டு காணாமல் போன தன் பிறந்த நாளில் ஊதி அணைத்தது, '6 மெழுகு வத்திகள்!’
தன் மகனின் ஆறாவது பிறந்த நாளன்று அவனை மெரினா பீச்சில் தொலைத்து விடுகிறார் ஷாம். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருக்கிறார். அவர் மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டிய போலீஸோ, மெள்ள ஓர் இருட்டு உலகத்துக்கு அவரை அறிமுகப் படுத்திவிட்டு தன் பொறுப்பைக் கை கழுவுகிறது. சென்னையில் தொடங்கி ஆந்திரா நகரி, வாராங்கால், மகாராஷ்டிரத்தின் போபால், கோவா, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா... என இந்தியா முழுக்க குழந்தை களைக் கடத்திப் பல்வேறு இடங்களில் விற்கும் மாஃபியா வலைப்பின்னல் கும்பலை ஷாம் சந்திப்பதும், அதனூடான துயர அனுபவங்களுமே படம்!
இந்தியாவின் 'மலிவு விலைத் தொழிலாளர்’ ரகசியத்தையும், குழந்தைக் கடத்தல் நெட்வொர்க் எத்தனை வீரியமாகப் பரவியிருக்கிறது என்பதையும் சினிமாவில் ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் வி.இஸட். துரையின் முனைப்பு, கிரேட்!
மகன் தொலைந்தபோது ஒரு தந்தையின் பரிதவிப்பை முழுமையாகக் கொண்டு வருவதில் திணறும் ஷாம், வெவ்வேறு பயண அனுபவங்களுக்குப் பிறகு சிக்குப் பிடித்து அடர்ந்த முடி, தாடியும் வீங்கிய கண்களுமாகப் பரிதவிக்கும் காட்சிகளில் நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறார். கடத்தப்பட்ட சிறுமி தப்பி வரும்போது அவளைக் காப்பாற்றுவதா, வேண்டாமா எனப் பதைப்பும் பதட்டமுமாகத் தவிக்கும் இடத்திலும், கொல்கத்தாவில், 'என்னைக் கூட்டிட்டுப் போங்க’ எனப் பல்வேறு மொழிகளில் குழந்தைகள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்போது உடைந்து நொறுங்கும் இடத்திலும்... பார்வை யாளர்களை நெகிழ வைக்கிறார்!
ஷாமின் மனைவியாக பூனம் கவுர். ஊனமுற்ற பிச்சைக்காரரின் காலில் 'அண்ணா...’ எனக் கதறி அழும் காட்சியில் மட்டும் அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஊனமுற்ற பிச்சைக்காரராக வரும் ஸ்ரீதர், கடத்தல் டான் திவாகராக வரும் அனில் முரளி இருவரும் அசத்தி இருக்கிறார்கள். பிச்சைக்கார வேடத்தில் நிழல் உலகத்துக்கே உளவு சொல்வது, காவல் துறையினரைக் கெத்தாக டீல் செய்வது எனப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர். 'ராம் சார்’, 'ராம் சார்’ என குரலில் கனிவும் செயலில் குரோதமுமாக வில்லத் தனம் செய்யும் அனில் முரளி, சூப்பர். ஆனால், நிழலுலக வில்லன் என்றாலே, அவர் பெண்மை கலந்த ஆணாக இருக்க வேண்டும் என்ற 'சித்தாந்தம்’ எரிச்சல்!
'மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனுக்குப் பிச்சை போடற மாதிரி, கீழே இருக்கிற நான் மேலே இருக்கிற உனக்குப் போடற பிச்சை இது. பொறுக் கிட்டுப் போ!’, 'இங்கே இருக்கிற எல்லாருமே கௌதம்தானே’, 'உனக்கு எத்தனை பிள்ளை வேணும்னாலும் நான் பெத்துத் தர்றேன்... நீ இங்கே வந்துரு’ என சில இடங்களில் சூழ்நிலைக்கேற்ற பொளேர் வசனங்கள் ஈர்க்கின்றன. ஆனால், படத்தில் அனைத்து பாத்திரங்களும் தன் தன்மை மீறி தத்துவம் பேசுவது, இறப்பதற்கு முன் முழுதாக இரண்டு நிமிடங்கள் பேசுவதெல்லாம்... அலுப்பு!
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, பின்னணியில் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. மாட்டு இறைச்சிக் கூடமோ, மின்விளக்கு தயாரிப்பு ஆலையோ, ரகசியக் கிடங்குகளோ... அந்தந்த இருப்பிட இயல்பில் நம்மை நிலைநிறுத்துகிறது கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு.
வீட்டை விற்று குழந்தையை மீட்க முனைவது, மனைவியை விட்டு மாதக்கணக்கில் பிரிந்து குழந்தையைத் தேடித் திரிவது... என்று மகன் பாசத்தில் ஷாம் உழல்வதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்தளவுக்கான பாசப்பிணைப்பு கொண்ட மகனின் முகம் நம் நினைவிலேயே இல்லை. அவ்வளவுக்குத்தான் ஆரம்பக் காட்சிகளில் மகனின் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இதனாலேயே, 'அச்சோ... அத்தனை சூட்டிகையான பையன் காணோமா...’ என்ற துடிப்பும், 'அந்தப் பிச்சைக்காரர்கள் கும்பலில் அந்தப் பையன் இருக்க வேண்டுமே’ என்ற பரிதவிப்பும் நமக்குத் தோன்றவே இல்லை!
குழந்தையைக் கடத்திய விவகாரத்தில் போலீஸ் தலையிடவில்லை... சரி. அட, ஏரியாவாரியாக தாதாக்களைப் போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார் ஷாம். அவரையுமா கண்டுகொள்ளாமல் விடுவார்கள்!? அதுவும் வில்லன்களே ஊர் ஊராக வழிகாட்டி அனுப்பி வைப்பதெல்லாம் என்னங்கப்பா? தேவைப்படும் சமயம் 'ஆக்ஷன் அவதாரம்’ எடுக்கும் ஷாமின் ஹீரோயிஸம் போன்ற லாஜிக் குறைபாடுகளின் தாக்கத்தால், '6 மெழுகுவத்தி’களின் சுடர் தட்டுத்தடுமாறி எரிகிறது!
ஆனால், படம் முடிந்த பிறகு தியேட்டரை விட்டு வெளியேறும் கும்பலில் தங்கள் குழந்தைகளின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள் பெற்றோர்கள். அந்தப் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காக, இந்த மெழுகுவத்தியை உயர்த்திப் பிடிக்கலாம்!
- விகடன் விமர்சனக் குழு
Complements :: விகடன் விமர்சனக் குழு

Wednesday, 25 September 2013
மாரடைப்பு அபாயம்...!
குறட்டையை தடுக்க வழிகள்:-
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை
செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும்.
சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற
போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது
அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற
தசைகளை அதிரச் செய்கின்றன.இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்
காரணங்கள்:
நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக
உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக்
குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை
ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:
யாராவது குறட்டை
விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர்
நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது
என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை
விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.
உடல் மிகவும் களைப்பாக
இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும்.
அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு
கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம்
போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அத்தோடு மிக தீவிரமாக
குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம்
உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி
குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும்.
பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து
தூங்க கூடாது.
சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க
கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த
கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை
அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3 வகை நோயாளிகள்:
குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.
1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.
2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.
3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.
மாரடைப்பு அபாயம்:
7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது
ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி
தூக்கம் கலையலாம்.
ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய
ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம்
உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.
கட்டிலில் மரணம் கூட
ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை,
சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது,
இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க
வேண்டும்.
ஆபத்தான நோய்:
டான்சில் வீக்கம், அடினாய்டு
பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம்.
இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும்
நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு
குறட்டை ஏற்படுகிறது.
கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை
வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக்
கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது
கருதப் படுகிறது.
ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள்
வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று
வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த
நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட
முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று
வெளிவருகிறது.
குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென
அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு
திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.
இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:
இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால்
திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி
விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறட்டை ஏற்படுவதற்கான
காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக்
கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.
உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள்
கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர்
நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம்
போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
குறட்டையை குறைக்க:
ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய
கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம்
மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக்
கொள்ளலாம்.
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப்
படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப்
பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு
பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை
ஒலி குறையும்.
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி
செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை
தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில்
கண்டறிந்த உண்மை.
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச்
சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை
பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால்
இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.
Monday, 23 September 2013
Thursday, 19 September 2013
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.!
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்,து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில்
கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும்.
பின்பு வடிகட்டி மூன்று
வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள்
ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும்
முன்பாகவும் பின்பாகவும்
பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்
Wednesday, 18 September 2013
Tuesday, 17 September 2013
பாரதி ..சமுக மாற்றத்தில் அவர் ஒரு சாரதி.!
பாரதி வாழ்க்கை வரலாறு :-
1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் பாரதி ஜனனம். பிறப்பிடம் எட்டயபுரம் ஜமீன். தந்தை; சின்னச்சாமி அய்யர்; தாய்; லட்சுமி அம்மாள். இளமைப் பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர்; சுப்பையா.
1887 : தாய் மரணம். சுப்பையாவுக்கு வயது 5.
1889 : தந்தை மறுமணம்; சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.
1893 : 11 வயதுச் சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ் சபையில் சோதித்து, வியந்து, பாரதி (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றனர்.
1894 முதல் 1897 : திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு. தமிழ்ப் பண்டிதருடன் சொற்போர்கள்.
1897 : ஜூன். 14 1/2 வயது பாரதிக்கும் 7 வயதுச் செல்லம்மாவுக்கும் திருமணம்.
1898 : ஜூன்; தந்தை மரணம். பெருந்துயர், சஞ்சலம்.
1898 முதல் 1902 : காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம். படிப்பு அலகாபாத் ஸர்வ கலாசாலையில் பிரவேசப் பரீட்சையில் தேர்வு. காசி இந்து கலாசாலையில் ஸமஸ்கிருதம், ஹிந்தி பயின்றார். கச்சம், வால் விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம்.
1902 முதல் 1904 : எட்டயபுரம் வாசம். மன்னருக்குத் தோழர். விருப்பமில்லா வேலை. மதுரை விவேகபாநுவில் தனிமை இரக்கம் என்ற முதல் பாடல் அச்சேறுகிறது.
1904 : ஆகஸ்ட் - நவம்பர்; மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தற்காலிகமாகத் தமிழ்ப் பண்டிதர்.
1904 : நவம்பர்; சென்னை சுதேச மித்திரன் உதவியாசிரியர். ஜி. சுப்பிமணிய அய்யரிடம் சிட்சை. சக்கரவர்த்தினி மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு.
1905 : வங்கப் பிரிவினை. சமுக சீர்திருத்தவாதி பாரதி அரசியல் தீவிரவாதியாகிறார். காசி காங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்தித்து, ஞான குருவாக ஏற்றல்.
1906 : ஏப்ரல்: சென்னையில் புரட்சிகரமான இந்தியா வாரப் பத்திரிகை உதயம். பாரதி பொறுப்பாசிரியர். மண்டயம் ந. திருமலாச்சாரி, எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி, சா. துரைசாமி அய்யர், வி. சக்கரைச்செட்டி, வ.உ.சி நட்பு. விபின சந்திரபாலர் சென்னை விஜயம். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிகை ஆரம்பம்.
1907 : டிசம்பர்; சூரத் காங்கிரஸ், திலகரின் தீவிரவாத கோஷ்டிக்கு ஆதரவு. வ.உ.சி., மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியுடன் சென்னைத் தீவிர இளைஞர் கோஷ்டியைச் சூரத் அழைத்துச் செல்கிறார். காங்கிரஸில் பிளவு. திலகர், அரவிந்தர், லஜபதி, பாரதி சந்திப்பு.
1907 : அரசியல் எதிரி, பழுத்த மிதவாதி வி. கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போகிறார். சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலு பக்கப் பிரசுரம் நிறைய வெளியிட்டு, இலவசமாய் விநியோகிக்கிறார் கிருஷ்ணசாமி அய்யர்.
1908 : சென்னை தீவிரவாதிகள் கோட்டை. சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுதேசி பத்மநாபய்யங்கார் முதலியோராலும் கொண்டாடப்படுகிறது. பின்னர் மூவர் கைது; வ.உ.சி., சிவாவுக்குத் தண்டனை, சிறை வாசம், வழக்கில் பாரதி சாட்சியம் சொல்கிறார்.
1908 : சுதேச கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிடுகிறார். முதல் நூல்.
1908 முதல் 1910 : இந்தியாவும் புதுமை வந்து, பிரெஞ்சிந்திய எல்லைக்குள்ளிருந்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பத்திரிகையின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் நுழையாதபடி, பிரிட்டிஷ் சர்க்கார் தடுக்கின்றனர். இந்தியா நின்று போகிறது.
1909 : ஜன்மபூமி என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடு.
1910 : விஜயா தினசரி, சூர்யோதயம் வாரப் பதிப்பு, பாலபாரத ஆங்கில வாரப்பதிப்பு, கர்மயோகி மாதப் பதிப்பு - யாவும் நின்று போகின்றன. சித்ராவளி ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டம் நிறைவேறவில்லை.
1910 : ஏப்ரல் : பாரதி ஏற்பாடு செய்ய, அரவிந்தர் புதுவை வருகிறார். வேதநூல் ஆராய்ச்சி.
1910 : நவம்பர் : கனவு என்ற ஸ்வயசரிதை முதலிய பாடல் அடங்கிய மாதா மணி வாசகம் நூல் வெளியீடு. வ.வே.சு அய்யர் வருகை.
1911 : மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் கொலை. புதுவைத் தேச பக்தர்கள் மீது சந்தேகம். போலீஸ் கெடுபிடிகள்; புதுவையிலிருந்து தேச பக்தர்களை வெளியேற்ற முயற்சிகள். பாரதியின் சிஷ்யகோடிகள் பெருகுகின்றனர்.
1912 : உழைப்பு மிக்க வருடம். கீதை மொழி பெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல் பாகம் பிரசுரம்.
1913 முதல் 1914 : சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி மறைந்து போகிறது. சுப்பிரமணிய சிவத்தின் ஞானபாநு பத்திரிகைக்கு விஷயதானம். தென் ஆப்பிரிக்கா நேடலில் மாதா மணிவாசகம் நூல் பிரசுரம். முதல் மகாயுத்தம் ஆரம்பம். புதுவைத் தேச பக்தர் தொல்லைகள் அதிகரித்தல்.
1917 : கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி சு. நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.
1918 : நெல்லையப்பர் சுதேச கீதங்களை நாட்டுப்பாட்டு என்று வெளியிடுகிறார்.
1918 : புதுவை வாசம் சலித்துப்போய், புதுவையை விட்டு நவம்பர் 20 ஆம் தேதி பாரதி கிளம்புகிறார். கடலூர் அருகே கைது. ரிமாண்டில் 34 நாள். முடிவில், வழக்கில்லையென விடுதலை. நேரே மனைவியின் ஊர் கடயத்துக்குச் செல்கிறார்.
1918 முதல் 1920 : கடயம் வாசம். திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக் கவிகள் பயனில்லை. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட விருப்பம்; நடைபெறவில்லை.
1919 : மார்ச்; சென்னைக்கு விஜயம். ராஜாஜி வீட்டில் காந்திஜி சந்திப்பு.
1920 : டிசம்பர் : சென்னையில் சுதேசமித்திரனில் மீண்டும் உதவியாசிரியர் வேலை. ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆசிரியர். பாரதி கட்டுரைகள் நிறைய எழுதுகிறார்.
1921 : ஜூலை - ஆகஸ்ட்; திருவல்லிக்கேணி கோயில் யானை ஒதுக்கித் தள்ள, யானை காலடியில் கிடக்கிறார். குவளை காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார் கவிஞர்.
1921 : செப்டம்பர்; யானை அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந்தாலும் வயிற்றுக் கடுப்பு நோய் பீடிக்கிறது.
1921 : செப்டம்பர் 11; நோய்க்கடுமை. மருந்துண்ண மறுப்பு.
1921 : செப்டம்பர் 12; நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு மறைவு. வயது 39 நிறையவில்லை.
Friday, 13 September 2013
Thursday, 12 September 2013
இரண்டே நாட்களில் ....21,00,000 !
பொம்மை மாதிரி இருக்கு, கார்ட்டூன் ரஜினி, மொக்கை என்று ஒரு தரப்பினர்
கமெண்ட் அடித்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் டீசர்
இணையத்தைக் கலக்கி வருகிறது.
யு ட்யூபில் இரண்டே நாட்களில் 2.1
மில்லியன் பார்வையாளர்கள் அந்த டீசரைப்
பார்த்துள்ளது
Read more at: http://tamil.oneindia.in/movies/news/kochadaiiyaan-teaser-creates-new-history-in-youtube-183251.html
Wednesday, 11 September 2013
Tuesday, 10 September 2013
ஒரே நாளில் 10,00,000......!
கோச்சடையான் படத்தின் முன்னோட்டம் ஒரே நாளில் பார்வை இட்டவர்கள் 10,00,000......!
தலைவர் தலைவர் தான் ..........!!
http://video.maalaimalar.com/MaalaimalarVideos/2013/09/09104106/Kochadaiiyaan-Trailer.vid
Wednesday, 4 September 2013
நேசிக்க வில்லை என்றாலும் ......வெறுக்க வேண்டாம் !
இந்த விழிம்பு நிலை மக்களை பார்கும் போது நமது கஷ்டம் ஒன்றும் பெரியது இல்லை !
விழிம்பு நிலை மனிதர்களை நேசிக்க வில்லை என்றாலும் வெறுக்க வேண்டாம் !
ஏன் என்றால் :- ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் !
ஒரு ஜான் வயிறை வளர்க்க ஒரு ஏழை படும் பட்டை கேட்டு பாருங்கள் !
http://www.youtube.com/watch?v=g77rDVqr8I4
Subscribe to:
Posts (Atom)

![like and support us on=== > @[122975057866538:274:அம்மா - I Lo√乇 My Mom ツ]](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/s403x403/1239950_394011557365415_295836214_n.jpg)